பாஜகவின் வெறுப்பு அரசியலை கண்டித்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் அவர்களின் சார்பில், மாநிலச் செயலாளர் திரு. முரளி அப்பாஸ் உரை.

18 October 2024

                `

ஆர்எஸ்எஸ்-பாஜக வெறுப்பு அரசியலை எதிர்த்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னையில் நடைபெற்ற மாபெரும் கண்டனக் கூட்டத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் திரு.  கமல்  ஹாசன் அவர்கள் சார்பில், கட்சியின் மாநிலச் செயலாளர் திரு. முரளி அப்பாஸ் அவர்கள் உரையாற்றினார். 

அவர் பேசும்போது, "இந்தியாவின் சுதந்திரத்துக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட குடும்பத்தில் பிறந்த ராகுல்காந்தியை தேசத் துரோகி என்றும், நாட்டுக்கு எதிரானவர் என்று விமர்சிப்பதா? தேசத்துக்காகப் போராடும், மக்களுக்காகப் பாடுபடும் மாமனிதரை துரோகி என்று சொல்லும் வெறுப்பு அரசியலை, வன்ம அரசியலை கண்டித்து கூட்டம் நடத்துவது போதாது, ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்க வேண்டும். 
 
அடிக்கடி வசுதேவ குடும்பம் என்று கூறும் பிரதமர் மோடிக்கு, அதன் அர்த்தம் தெரியுமா? இந்த தேசத்தை ஒரு குடும்பமாக கருதியிருந்தால், ராகுல்காந்தியை இப்படிப் பேசுவாரா? மக்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் அந்த தேசம் வலிமையாக இருக்கும். இந்தியா கூட்டணி, மதச்சார்பற்ற மக்களை ஒற்றுமைப்படுத்தும் கூட்டணி.

மதத்தால் மக்களைப் பிளவுபடுத்தி, மோதலை உண்டாக்கி, தேசத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நீங்கள் தேச பக்தர்கள், மக்களுக்காகப் பாடுபடும், அவர்களை ஒன்று திரட்டும் நாங்கள் தேசத் துரோகிகளா? 

2029-ல் பாஜக ஆட்சி கலைந்து, இந்தியா கூட்டணி ஆட்சி மலரும். தற்போது நாகரிகமற்ற, தேச பக்தியற்ற முறையில் அரசியல் நடத்தும் பாஜக, அப்போது எதிர்க்கட்சியாக மதிக்கப்பட வேண்டுமெனில், இப்போதிலிருந்தே வெறுப்பு அரசியலை, வன்ம அரசியலைத் தவிர்த்து, ஒழுக்கமான அரசியல் நடத்த வேண்டும்" என்றார்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1847251446955147585

Facebook: https://www.facebook.com/share/v/oe44Dp1ZQf613aB4/

Instagram: https://www.instagram.com/reel/DBRE7OmqJqq/?utm_source=ig_web_copy_link

Recent video







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post