விவசாய சங்கத்தினர் 50 பேர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தனர்.

24 January 2024
 

2024 ஜனவரி 23ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் தலைமை நிலையத்தில் தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் முன்னிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார உழைப்பாளி விவசாய சங்கத்தின் தலைவர் திரு. A.அருள் தலைமையில் 50 பேர் கட்சியில் இணைந்தனர். 

இதனைத் தொடர்ந்து விரைவில் விவசாய சங்கத்தினர் 3000 பேர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைவதற்கு தயாராக உள்ளதாக விவசாய சங்க தலைவர் தெரிவித்தார்.

நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் திரு.ஆ.அருணாச்சலம், மாநில செயலாளர்கள் திரு. செந்தில் ஆறுமுகம், திரு. சிவ இளங்கோ, திரு. ராகேஷ் ராஜசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

Download PDF


Recent video







Share this post