தமிழகத்தில் ஒன்றிய அரசின் “அடல் ஆய்வகத் திட்டத்தின்” அடுத்த கட்டமென்ன?
9லட்சம் மாணவர்களின் சிந்தனைகள் செயலாக்கம் பெறவேண்டும்;
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள் வலியுறுத்தல்!!
அடல் டிங்கரிங் லேப் திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும், பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள அடல் டிங்கரிங் லேப் (Atal Tinkering Labs - ATL) மூலம் உருவாக்கப்பட்ட புதுமையான யோசனைகள் மற்றும் மாதிரிகள் அடுத்தகட்டத்திற்கு எவ்வாறு கொண்டு செல்லப்படுகின்றன என்பது குறித்தும், மத்திய திட்டமிடல் அமைச்சகத்திடம் நாடாளுமன்றத்தில் நட்சத்திரக் குறியிடப்படாதக் கேள்வியை, திரு. கமல் ஹாசன் அவர்கள் எழுப்பினார்.
தற்போது தமிழகத்தில் 975 அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 9.19 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளதுடன், இதுவரை 36,509 மாதிரி வடிவங்கள் (Prototypes) உருவாக்கப்பட்டுள்ளன.
ஆய்வக அளவில் உருவாக்கப்படும் சிறந்த கண்டுபிடிப்புகளை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியது அவசியமாகும். அதற்கு ஏதுவாக:
காப்புரிமை பெறுவதற்கான உதவிகள் (Patent Support) வழங்குதல்.
சிறந்த திட்டங்களை 'அடல் அடைகாப்பு மையங்களுடன்' (Atal Incubation Centres) இணைத்தல்.
இலக்குகளின் அடிப்படையில் தொடக்கக்கால நிதி உதவி (Seed Funding) அளித்தல்.
தொழில் துறை கூட்டாளிகள் மற்றும் கள அளவிலான சோதனை வாய்ப்புகளைக் (Real-world Pilot Opportunities) கண்டறிய உதவுதல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என திரு. கமல் ஹாசன் அவர்கள் தனது கேள்வியில் குறிப்பிட்டிருந்தார் .
மாதிரி வடிவத்தில் தொடங்கி காப்புரிமை பெறுதல், அடைகாப்பு மையம், மூலதனம் பெற உதவுதல், கள ஆய்வு மற்றும் புதிய தொழில்முயற்சியாக (Venture Creation) உருவெடுப்பது வரையிலான அனைத்து நிலைகளையும் முறையாகக் கண்காணித்து வழிநடத்துவது அவசியமாகும் என்றும்,
மாணவர்களின் சிறந்த யோசனைகள் வெறும் பள்ளி அளவிலான திட்டமாகவோ அல்லது மாதிரி வடிவமாகவோ முடிந்துவிடாமல், அவை வெற்றிகரமான தொழில்முயற்சிகளாக மாறுவதற்குத் தேவையான நிறுவன அளவிலான அனைத்து ஆதரவுகளையும் (Institutional Support) உறுதி செய்வதே முதன்மை நோக்கமாகும் என்பதையும் திரு. கமல் ஹாசன் அவர்கள் வலியுறுத்தினார்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Social Media Link
X: https://x.com/i/status/2087912362044969371
Facebook: https://www.facebook.com/share/p/17UXWFLs17/
Instagram: https://www.instagram.com/p/Db--jbWKrbw/?igsh=a25odWY5bGk4YjRh