சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கோவையில் ஆலோசனைக் கூட்டம்.

29 March 2025

                `

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கோவையில் ஆலோசனைக் கூட்டம்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதல்படி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்டம் சார்பில் ஆலோசனைக் கூட்டம், துணைத் தலைவர் திரு. R.தங்கவேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கோவை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, மாவட்டச் செயலாளர் திரு. பிரபு அவர்கள் முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு வார்டுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கபட்டு, அந்தந்த வார்டுகளுக்கு உட்பட்ட பூத்களுக்கு ஏஜென்ட் நியமிக்கும் பணியை உடனடியாகத் தொடங்குவது என்று முடிவெடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், மக்கள் நீதி மய்யம் மண்டல அமைப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், மாவட்டத் துணைச் செயலாளர்கள், மாநகரச் செயலாளர்கள், மாநகர அமைப்பாளர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு வார்டுக்கும் அவர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். மேலும், பூத் ஏஜென்ட் படிவத்தை நிரப்பி, விரைவில் கட்சித் தலைமையிடம் சமர்பிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1905929728391024703

Facebook: https://www.facebook.com/share/p/18Mu1wpVCu/

Instagram: https://www.instagram.com/p/DHx6RvQJ1x4/?utm_source=ig_web_copy_link

Recent video







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post