சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கோவை வடக்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில் கலந்தாலோசனைக் கூட்டம்
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களது ஆலோசனையின் பேரில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் கோவை வடக்கு மாவட்டம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவை வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு துணைத் தலைவர் திரு. R.தங்கவேலு அவர்கள் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் திரு. தனவேந்திரன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில், ஒவ்வொரு வார்டுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அந்தந்த வார்டுகளில் உள்ள பூத்களுக்கு பூத் ஏஜென்ட் நியமிக்கும் பணியை உடனடியாகத் தொடங்குவதென்று முடிவெடுக்கப்பட்டது.
இதில் கட்சியின் மண்டல அமைப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், மாவட்ட பொருளாளர், மாவட்ட துணைச் செயலாளர்கள், மாநகரச் செயலாளர்கள், மாநகர அமைப்பாளர்கள் பங்கேற்றதுடன், ஒவ்வொரு வார்டுக்கும் அவர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். மேலும், பூத் ஏஜென்ட் படிவத்தை நிரப்பி, விரைவில் கட்சித் தலைமையிடம் சமர்பிப்பது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1905946162651386114
Facebook: https://www.facebook.com/share/p/15pLXKpEr6/
Instagram: https://www.instagram.com/p/DHyB0o-JvQR/?utm_source=ig_web_copy_link