மக்கள் நீதி மய்யம் சார்பில் சைதாப்பேட்டையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மருத்துவ முகாம்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதல்படி, சென்னை சைதாப்பேட்டையில் இலவச கண் பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம், கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆகியவை சிறப்பாக நடைபெற்றன.
கட்சியின் சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் அவர்களின் முன்னிலையில், மாவட்டச் செயலாளர் திரு. J.கதிர் தலைமையில், வட்டச் செயலாளர் திரு. ஏ.ராஜேந்திர குமார் ஒருங்கிணைப்பில், ஏராளமான பொதுமக்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இதில், மாவட்டப் பொருளாளர் திரு. பா.சண்முகம், மாவட்டத் துணைச் செயலாளர்கள் திரு. கோவிந்தராஜுலு, திரு. இ.எல்.அசோக் ஆனந்த், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் திரு. ரமேஷ் கண்ணன், துணை அமைப்பாளர் திரு. ஆர்.மோகன்ராஜ், நற்பணி அணி மாவட்ட அமைப்பாளர் திரு. வி.பி.முனுசாமி, மகளிரணி மாவட்ட அமைப்பாளர் திருமதி சுபாஷினி, மீனவரணி மாவட்ட அமைப்பாளர் திரு. குமார், தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் திரு. N.சுந்தர், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் திரு. ஜே.சஞ்சீவி ராமன், மாநகரச் செயலாளர்கள் திரு. வெற்றிச்செல்வன், திரு. ஏ.ஜி.சின்னையன், திரு. இ.எம்.லத்தீப் ஹாசன், வட்டச் செயலாளர்கள் திரு. ஜி.ஆர்.முரளிதரன், திரு. எஸ்.ஷங்கர், திரு. பி.முருகன், திரு. வி.சக்திவேல், கிளைச் செயலாளர்கள் திரு. பி.ஆறுமுகம், திரு. வி.ஆறுமுகம், திரு. ஏ.பாக்கியம், திரு. சிவக்குமார், திரு. மோகன், திரு. பெரியார் தாசன், திரு. சத்திய நாராயணன், திரு. விசு, திரு. ஆறுமுகம், திருமதி. திவ்யா மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1906333202316398838
Facebook: https://www.facebook.com/share/p/1ATFXd3HHB/
Instagram: https://www.instagram.com/p/DH0zT6XIQZF/?utm_source=ig_web_button_share_sheet&igsh=MzRlODBiNWFlZA==