மக்கள் நீதி மய்யம் திருச்சி மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் சமூக ஊடகம் தொடர்பான பயிற்சி பட்டறை.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களது வழிகாட்டுதலின்படி, கட்சியின் திருச்சி மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் சமூக ஊடகம் தொடர்பான பயிற்சி பட்டறை மயிலாடுதுறையில் உள்ள கட்சி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
திருச்சி மண்டலச் செயலாளர் திரு. M.N.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள் பங்கேற்று, பூத் கமிட்டி அமைத்தல், நிர்வாகிகள் நியமனம், தேர்தல் களத்தில் சமூக ஊடகத்தின் பங்கு மற்றும் தொகுதி விவரங்கள் குறித்து எழுச்சி உரையாற்றினார்.
சமுக ஊடக அணி மாநிலச் செயலாளர் திரு. லக்ஷ்மன், திருச்சி மண்டல அமைப்பாளர் திரு. செந்தில்குமார் ஆகியோர் சமூக ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு பயிற்சிகளை வழங்கினர்.
சமூக ஊடக அணி மாவட்ட துணை அமைப்பாளர் திரு. சூரியபிரகாஷ் அவர்களின் ஒருங்கிணைப்பில், மாணவர் அணி மண்டல அமைப்பாளர் திரு. உமாசங்கர், விவசாய அணி மண்டல அமைப்பாளர் திரு. ராஜசேகரன், மயிலாடுதுறை மாவட்ட துணைச் செயலாளர் திரு. மனோகர் ஆகியோரின் முன்னிலையில், நகரச் செயலாளர் திரு. அகோரம் அவர்கள் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்டச் செயலாளர்கள் திரு. அனஸ், திரு. J.J.அசோகன், திரு. M.ராஜகோபால், திரு. சகுபர் சாதிக், திரு. ரங்கசாமி மற்றும் திருச்சி மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் திரு. மணிசங்கர், தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் திரு. சேகர், தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் திரு. வேலு, மகளிரணி மாவட்ட அமைப்பாளர் திருமதி. சுபா மூர்த்தி, மாணவரணி மாவட்டத் துணை அமைப்பாளர் திரு. ஹரிமாறன், நகர அமைப்பாளர் திரு. அன்பு, ஒன்றிய அமைப்பாளர் திரு. பிரித்வி, ஆகியோர் செய்திருந்தனர். நகரச் செயலாளர் திருமதி. கமலி கணேசன் மற்றும் திரு. மூர்த்தி ஆகியோர் நன்றி கூறினர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1906963059866014066
Facebook: https://www.facebook.com/share/p/1664okHSDb/
Instagram: https://www.instagram.com/p/DH5P84dJ7QC/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==