மக்கள் நீதி மய்யம் சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் பொதுமக்களுக்கு நீர், மோர், குடிநீர் வழங்கப்பட்டது.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களது ஆலோசனையின்பேரில், வில்லிவாக்கம் தொகுதி நிர்வாகிகள் சார்பில், மாவட்டச் செயலாளர் திரு. C.கோமகன் தலைமையில், ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில், கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் பொதுமக்களுக்கு நீர், மோர், ரோஸ்மில்க், பால் சர்பத், மேங்கோ ஜூஸ், பாதாம் மில்க், தர்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டன.
கட்சியின் துணைத் தலைவர் திரு A.G.மௌரியா I.P.S. (Retd.), சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன், மாநில இணைச் செயலாளர் Dr.M.K.S.சுரேஷ், பொறியாளர் அணி மண்டல அமைப்பாளர் திரு. P.சரவணகுமார், நம்மவர் பேரவை மாநில துணை ஒருங்கிணைப்பாளர் திரு. ஜிம் மாடசாமி ஆகியோர் பங்கேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நீர், மோர் மற்றும் பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினர்.
மாவட்டச் செயலாளர் திரு. விஸ்வநாதன், மாவட்டப் பொருளாளர் திரு. ஹரி, சமூக ஊடக அணி மாவட்ட அமைப்பாளர் திருமதி. நான்சி பிரிசில்லா, பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் திரு. கபாலி, நற்பணி அணி மாவட்ட அமைப்பாளர் திரு. சதீஷ்குமார், நற்பணி அணி மாவட்ட துணை அமைப்பாளர் திருமதி. பத்மா, நகரச் செயலாளர்கள் திரு. ரவிச்சந்திரன், திரு. நாகேஸ்வராவ், திரு. ராஜேந்திரன், வட்டச் செயலாளர்கள் திரு. அருள், திரு. லட்சுமணன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1907001654827999732
Facebook: https://www.facebook.com/share/p/18n1TeU9mt/
Instagram: https://www.instagram.com/p/DH5hxp2JgTM/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==