மதிமுக பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்களின் சமத்துவ நடைபயணத் தொடக்க விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்பு.
மதிமுக பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்களது தலைமையில் நடைபெற்று வரும் சமத்துவ நடைபயணத் தொடக்க விழா திருச்சியில் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கிவைத்த இந்நிகழ்வில் தமிழ்நாட்டின் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் முன்னிலை வகித்தனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே.எம்.காதர் முகைதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான திரு. தொல் திருமாவளவன், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன் மற்றும் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்றனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், மாநிலங்களை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களது சார்பில், கட்சியின் பொதுச் செயாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள் தொடக்க விழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.
அவர் பேசும்போது "மதம், ஜாதி, மொழி உள்ளிட்டவைகளின் பெயரால் மக்களிடையே பிளவை ஏற்படுத்தி, அதன்மூலம் அரசியல் ஆதாயம் அடைய விரும்பும் சக்திகளை மக்கள் அடையாளம் காணவும், அவர்களைப் புறக்கணிக்கவும் திரு. வைகோவின் சமத்துவ நடைபயணம் உதவியாக இருக்கும். வாக்குவங்கி அரசியலுக்காக பொதுமக்களின் ஒற்றுமையைக் குலைத்து, அவர்களிடம் பிரிவினையைத் தூண்டும் பாசிச சக்திகளை எதிர்கொள்ள, ஜனநாயகத்தின் மீதும், அரசியலமைப்பின் மீதும் நம்பிக்கையுள்ள அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து செயல்படுவது காலத்தின் கட்டாயமாகும். அதற்கு இந்த சமத்துவ நடைபயணம் உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை" என்றார்.
மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு. K.N. நேரு அவர்கள் தலைமையில், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் முன்னிலையில்,
மதிமுக முதன்மைச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. துரை வைகோ அவர்கள் வரவேற்புரையுடன் தொடங்கிய இந்நிகழ்வில்,
மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் திரு.எஸ். ரகுபதி அவர்கள், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. சிவ. வீ. மெய்யநாதன் அவர்கள்,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநிலச் செயலாளர் திரு. E.T. அரவிந்ராஜ் அவர்கள்
மற்றும் சமூக ஊடக அணி திருச்சி மண்டல அமைப்பாளர் திரு. செந்தில் குமார், மாவட்டச் செயலாளர்கள் திரு. சுரேஷ், திரு. சதீஷ்குமார், திரு. கிஷோர்குமார், திரு. சகுபர் சாதிக் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Social Media Link
X: https://x.com/i/status/2007403731072307488
Facebook: https://www.facebook.com/share/p/1RBU2MK8q4/
Instagram: https://www.instagram.com/p/DTC7GL8iebE/?igsh=ZTU1N2lwdjB6cGY3