மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
மதுரை - மலைச்சாமிபுரம், பரமக்குடி – வேந்தோணி மற்றும் அருப்புக்கோட்டை - கல்லூரணி உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டுவரும் நம்மவர் படிப்பகங்களில் பயிலும் மாணாக்கர்களுக்கு,
நம்மவர் தொழிற்சங்கப் பேரவை சார்பில் கலைவழித் திறன் மேம்பாட்டு பயிற்சி-2025 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. R. சொக்கர் அவர்களின் தலைமையில்,
மதுரை கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு. கதிரேசன், அருப்புக்கோட்டை மாவட்டச் செயலாளர் திரு. செல்வகுமார், பரமக்குடி மாவட்டச் செயலாளர் திரு. கார்த்திகேயன் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
கலைவழித் திறன் மேம்பாட்டு பயிற்சியளித்த ஆசிரியர்களுக்கும், பயிற்சி பெற்ற மாணவர்களுக்கும் நம்மவர் தொழிற்சங்கப் பேரவை சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும் நிகழ்வில் யோகா, ஓவியம், கைவினைக்கலை, ஒரிகாமி, நாடகம், நடனம் உள்ளிட்ட பயிற்சிகள் அளித்த ஆசிரியர்கள் திரு. செல்வம், திருமதி. விஜயலட்சுமி, திரு. கோகுலகிருஷ்ணன், திரு. C. சந்திரா அவர்கள், திரு. S. யாழிசை நாகராஜ், திரு. J. ஸ்ரீதர் ஆகியோருடன், நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் மாநில பொருளாளர் திரு. P.S. சரவணன், மாநிலத் துணைச் செயலாளர்கள் திரு. R.ஜெகன், திரு. T.பிரசாத், செயற்குழு உறுப்பினர் திரு. S.ரமேஷ், நிர்வாகி திரு. செல்வராஜ், மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் முதலோனோர் கலந்து கொண்டனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Social Media Link
X: https://x.com/i/status/2005856985351348631
Facebook: https://www.facebook.com/share/p/17FLdZ9D7s/
Instagram: https://www.instagram.com/p/DS38MQZiTsZ/?igsh=YWgwZG9kc3k1ZDB6