மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் சார்பாக, மறைந்த மாநிலப் பேச்சாளர் குறிஞ்சி P.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிய கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணச்சலம் அவர்கள்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின்மீது அளவுகடந்த அன்பும், மாறாப் பற்றுடையவரும், கட்சியின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டவரும், கடந்த “2023 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2024 பாராளுமன்றத் தேர்தல்” உள்ளிட்டவைகளில், தமிழ்நாடு முழுவதும் தலைவர் அவர்களின் பிரச்சாரங்களில் ஆர்வத்துடனும், அர்ப்பணிப்புடனும் பங்கேற்று பரப்புரையாற்றிய, கட்சியின் மாநிலப் பேச்சாளர் குறிஞ்சி P.ராமகிருஷ்ணன் அவர்கள் வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தினார்.
அமரர் குறிஞ்சி P. ராமகிருஷ்ணன் அவர்கள் மீது தலைவர் அவர்களும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அவரை இருமுறை தலைவர் அழைத்து பேசியுள்ளார்.
திரு. ராமகிருஷ்ணன் மறைந்த செய்தி அறிந்த தலைவர் தான் வெளிநாட்டில் இருக்கும் காரணத்தால், பொதுச் செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம் அவர்களை அழைத்து, தன் சார்பாக சென்று அஞ்சலி செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிவர அனுப்பிவைத்தார். திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள் உடனே நெல்லை சென்று அவர் குடும்பத்தாருக்கு ஆறுதல்கூறி, தலைவரின் செய்தியைத் தெரிவித்தார்.
அஞ்சலி செலுத்தியபோது கட்சியின் நெல்லை மண்டலச் செயலாளர் Dr. பிரேம்நாத், வழக்கறிஞர் அணி நெல்லை மண்டல அமைப்பாளர் திரு. ரமேஷ், பாளையங்கோட்டை மாவட்டச் செயலாளர் திரு. P.விஜயகுமார், நெல்லை மாவட்டச் செயலாளர் திரு. ஜெகதீஷ், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் திரு. ஜவகர், கோவில்பட்டி மாவட்ட பொறுப்பாளர் திரு. ரமேஷ், ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு மாவட்ட அமைப்பாளர் திரு. சலீம், பொறியாளர் அணி நெல்லை மாவட்ட அமைப்பாளர் திரு. மதன் ஆல்பர்ட் பிரபு, விவசாய அணி நெல்லை மாவட்ட அமைப்பாளர் திரு. விஜயகுமார், மாணவர் அணி தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் திரு. அருண் குமார், மாவட்டத் துணைச் செயலாளர்கள் திரு. மாரி ராஜா, திரு. அக்பர், பொறியாளர் அணி நெல்லை மாவட்டத் துணை அமைப்பாளர்கள் திரு. சார்ல்ஸ், திரு. நிஜாம்தீன், நற்பணி அணி நெல்லை மாவட்டத் துணை அமைப்பாளர் திரு. R.மணிகண்டன், நற்பணி அணி மாநகர அமைப்பாளர் திரு. செல்லப்பா, நகரச் செயலாளர்கள் திரு. சுனில் குமார், திரு. சித்திக், திரு. இந்தியன் சங்கர், ஒன்றியச் செயலாளர் திரு. கிருஷ்ணன், வட்ட செயலாளர்கள் திரு. ராகவன், திரு. சுப்புராஜ், வழக்கறிஞர் அணி திரு. சுரேஷ், திரு. ராஜா, திரு. சுதாகர், நற்பணி அணி திரு. ராஜ் திலக் மற்றும் திரு. கோபால கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1907674675003392397
Facebook: https://www.facebook.com/share/v/1DsffhnfPh/
Instagram: https://www.instagram.com/reel/DH-TvcyqFca/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==