கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்’ எனும் தத்துவ முழக்கமாக்கி நமக்களித்த பெருமகனார் அம்பேத்கரின் பிறந்த நாள் இன்று.

14 April 2026

ஒடுக்கப்பட்ட இனங்களின் விடுதலைக்கான செயல்திட்டத்தை, ‘கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்’ எனும் தத்துவ முழக்கமாக்கி நமக்களித்த பெருமகனார் அம்பேத்கரின் பிறந்த நாள் இன்று. 

‘சாதியே என் எதிரி’ என நான் தேர்ந்துகொண்ட பயணத்துக்கு விதை போட்டவர் பெரியார் எனில் ஒளி தந்தவர் அம்பேத்கர். அவர் இயற்றித்தந்த அரசியலமைப்புதான் நாம் நிகழ்த்தி வரும் ஜனநாயகப் போரின் மாபெரும் ஆயுதம். 

சாதியை அழித்தொழித்தல், புத்தரும் அவரது தம்மமும், சூத்திரர்கள் யார்?, இந்தியாவில் சாதிகள், விசாவுக்காகக் காத்திருத்தல் ஆகிய அம்பேத்கரின் புத்தகங்கள் இன்றைய தலைமுறை அவசியம் வாசிக்க வேண்டியவை. நமது வாழ்வுக்கு வழியும் ஒளியும் காட்டக்கூடியவை.

Social Media Link

X: https://x.com/ikamalhaasan/status/2043929144132809179?s=20

Facebook: https://www.facebook.com/share/p/1CZSiToriR/


Recent video







Share this post