01/01/2023 அன்று மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக்குழு(CGB), செயற்குழு(EC) கூட்டமானது தலைவர் கமல் ஹாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.நிர்வாகிகளுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்த தலைவர் அவர்கள் கட்சியின் அடுத்தகட்ட செயல்திட்டங்கள், பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் குறித்து விவாதித்தார். கூட்டத்தின் முடிவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள இந்தியாவின் மாண்புகள், இந்திய அரசியல் சாசனம் ஆகியவற்றைக் காக்கும் பொருட்டும்; வெறுப்பு அரசியலுக்கு மாற்றாக “ஒற்றுமையை” வலியுறுத்தும் வகையிலும் நடத்தப்பட்டு வரும் “பாரத் ஜோடோ யாத்திரையில்” பங்கேற்பது என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்கதொரு முடிவை எடுத்த தலைவர் அவர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. யாத்திரையில் பங்கேற்ற நிகழ்வானது, “பெருமை மிகு இந்தியன்” என்று தன்னைக் குறிப்பிடும் தலைவர் அவர்கள், தேச நலனுக்கு பாதிப்பு ஏற்படும்போது கட்சியின் எல்லைகளைக் கடந்து களத்தில் நிற்பார் என்பதை மீண்டும் நிரூபிப்பதாக இருந்தது. கடந்த காலங்களில் பாபர் மசூதி இடிப்பு, காவிரிப் பிரச்னை, ஜல்லிக்கட்டு, நீட் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் எழுந்தபோது மய்யத்தின் தலைவர், தேசநலனை முன்னிறுத்தும் தனது கருத்தை உரத்தகுரலாக எழுப்பியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
2. திரு.ஆ.அருணாசலம் M.A.B.L அவர்கள் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக்குழு(CGB) உறுப்பினராக நியமிக்கப்படுகிறார்.
3. தலைவரும், நிர்வாகிகளும் நிர்வாகக்குழு(CGB) உறுப்பினராக நியமிக்கப்பட்ட திரு.அருணாச்சலம் அவர்களின் பணிகள் சிறப்புற வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
-ஊடகப்பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.