மாண்புமிகு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. P.K.சேகர் பாபு அவர்கள் முன்னிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி. பிரியா ராஜன் அவர்களின் ஏற்பாட்டில், 27-11-2025 அன்று ‘‘மனிதநேய உதயநாள்” விழா நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் தலைவர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு. கமல் ஹாசன் அவர்கள், கல்லூரி மாணவ, மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை, உபகரணங்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கான பேறுகால நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.
சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத்தில், 27-11-2025 அன்று மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கான அழைப்பிதழை
மக்கள் நீதி மய்யம் தலைவர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு. கமல் ஹாசன் அவர்களிடம் மாண்புமிகு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. P.K.சேகர் பாபு அவர்கள் முன்னிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி. பிரியா ராஜன் அவர்கள் தலைவர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வழங்கினார்.
நிகழ்வின்போது கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம், தலைமை நிலையச் செயலாளர் திரு. செந்தில் ஆறுமுகம், சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன், மாவட்டச் செயலாளர் திரு. உதயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.
