இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் மகன் மனோஜ் காலமான செய்தி கேள்விப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தார்.
அவர் வெளியூரில் இருக்கும் காரணத்தால், இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி மற்றும் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் சார்பாக கட்சியின் துணைத் தலைவர் திரு.A.G.மௌரியா IPS(Rtd) அவர்கள், பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் M.A., B.L., அவர்கள், மாநிலச் செயலாளர்கள் திரு. செந்தில் ஆறுமுகம், திரு. முரளி அப்பாஸ், திரு. லஷ்மன், திரு. ராகேஷ் ராஜசேகரன், திருமதி. சினேகா மோகன்தாஸ், மாநிலத் துணைச் செயலாளர் திரு. சண்முகராஜன் முதலானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.