தலைவர் நம்மவரை சந்தித்த, புதுச்சேரி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்.

27 July 2024
 

வணக்கம்.

இன்று (27.07.2024) காலை 12.30 மணியளவில், நமது மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நம்மவர். திரு.கமல்ஹாசன் அவர்களை, புதுச்சேரி காங்கிரஸ் கட்சித்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. வைத்திலிங்கம் அவர்கள், புதுச்சேரி முன்னாள் முதல்வர் திரு. நாராயணசாமி அவர்கள், புதுச்சேரி காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் திரு. கந்தசாமி மற்றும் மாநில நிர்வாகிகள் முதலானோர் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்பு மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. 

நிகழ்வில், மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத்தலைவர்கள் திரு. A.G.மௌரியா அவர்களும், திரு. R. தங்கவேலு அவர்களும், பொதுச்செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்களும், புதுச்சேரி பொதுச்செயலாளர் திரு. G.R.சந்திரமோகன் அவர்களும், மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

Download PDF


Recent video







Share this post