2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் விழுப்புரம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதலின்படி, கட்சியின் விழுப்புரம் மண்டலச் செயலாளர் திரு. ஸ்ரீபதி அவர்களின் ஒருங்கிணைப்பில், விழுப்புரம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் நடைபெற்றது.
பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சமூக ஊடக அணி மாநிலச் செயலாளர் திரு. லக்ஷ்மன், பயிற்சி பட்டறை அணி கோவை மண்டல அமைப்பாளர் திரு.ஸ்ரீதர், மாவட்டச் செயலாளர்கள் திரு. மூர்த்தி, திரு. சந்தோஷ் குமார், திரு. கணேஷ் மற்றும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மத்திய அரசு தமிழகத்தில் இந்தி மொழியைத் திணிப்பதைக் கண்டித்தும், விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் விளை பொருட்கள் அனைத்திற்கும், மத்திய அரசானது இலாபகரமான-குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டியதை வலியுறுத்தியும், தங்கத்தைப் போல் உயர்ந்துவரும் உரத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்திட வேண்டியதின் அவசியத்தையும், கிராம சபைகளின் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டுப் பேசிய பொதுச்செயலாளர் அவர்கள் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை திறம்பட எதிர்கொள்ளும்பொருட்டு விழுப்புரம் மண்டலத்திலுள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் பூத் கமிட்டிகளை விரைந்து அமைத்திட வலியுறுத்தினார்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1907034782959280493
Facebook: https://www.facebook.com/share/p/1AKQsV4Ket/
Instagram: https://www.instagram.com/p/DH5vzn5o8gV/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==