கோவையில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

5 மே, 2025

கோவையில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களது வழிகாட்டுதல்படி, சிங்காநல்லூர் மநீம மாவட்டச் செயலாளர் திரு.மயில் K.கணேஷ் அவர்களின் ஒப்புதலோடு, கோயம்புத்தூர் சிங்காநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதி தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பூத் கமிட்டி மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு, சிங்காநல்லூர் மநீம மாவட்ட துணைச் செயலாளர் திரு. A .சௌந்தரராஜன் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் திரு. R.செந்தில்குமார், தொழில் முனைவோர் அணி அமைப்பாளர் திரு. சிவக்குமார் ஆகியோரின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர்கள் திரு. ஜெயசுதன், திரு. ரகுபதி, மாநகரச் செயலாளர்கள் திரு. ரகுபதி, திரு. சரவணன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் திருமதி S.மணிமொழி, மாநகர அமைப்பாளர்கள் திரு. ராதாகிருஷ்ணன், திரு. ஜிம் பாபு, செல்வி.நித்யஸ்ரீ, மாநகர பொருளாளர் திரு. கார்த்திக், மகளிர் அணி வட்ட அமைப்பாளர் திருமதி. சுலோச்சனா, வட்டச் செயலாளர்கள் திரு. பேச்சிமுத்து, திரு. மோகன், திரு. கமல் தேவராஜ், திருமதி சசிகலா, திருமதி உஷா லட்சுமி, திரு. சதாம் உசேன், இளைஞர் அணி வட்ட அமைப்பாளர் திரு. பிரபாகரன், மற்றும் நீலிக்கோணம் பாளையம் திரு. ராஜேந்திரன், மசக்காளிபாளையம் திரு. ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1919403950517932033

Facebook: https://www.facebook.com/share/p/1ALPcjjiZu/

Instagram: https://www.instagram.com/p/DJRpo1wJFL_/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post