கண்டன ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் திரளாகப் பங்கேற்பு...
மும்மொழிக் கொள்கைத் திணிப்பு, கல்விக்கான நிதியை ஒதுக்க மறுப்பு, மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரண நிதி ஒதுக்காதது, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்காதது, தேசிய வேலை உறுதித் திட்டம் மற்றும் மெட்ரோ ரயில் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்காதது என தொடர்ந்து தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களின் நலன்களுக்கும் விரோதமாகச் செயல்பட்டு வரும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. செல்வப்பெருந்தகை அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய முன்னாள் அமைச்சர்கள் ப.சிதம்பரம், கே.வீ.தங்கபாலு மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதலின்பேரில், பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம் அவர்கள் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளாகப் பங்கேற்றனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள், மும்மொழிக் கொள்கை திணிப்பு, தமிழகத்துக்கு உரிய நிதியை ஒதுக்காதது, வக்ஃபு வாரியச் சட்டம், மணிப்பூர் கலவரம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக கடும் கண்டனங்களைத் தெரிவித்தார். மேலும், வக்ஃபு வாரியச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்துவது தொடர்பாக கட்சித் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன், மாணவரணி மாநிலச் செயலாளர் திரு. ராகேஷ் ராஜசேகரன், ஆய்வு மற்றும் கொள்கை உருவாக்க அணி மாநிலச் செயலாளர் திரு. அர்ஜுனர், மாணவரணி சென்னை மண்டல அமைப்பாளர் திரு. சந்துரு, மாவட்டச் செயலாளர்கள் திரு. கதிர் (சைதாப்பேட்டை), திரு. முசாபர் (சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி), திரு. பாலமுருகன் (வேளச்சேரி), திரு. மாறன் (ராதாகிருஷ்ணன் நகர்), திரு. சண்முகசுந்தரம் (விருகம்பாக்கம்), மாவட்டத் துணைச் செயலாளர் திரு. சின்னதுரை (திரு.வி.க நகர்), மாணவரணி மாவட்ட அமைப்பாளர்கள் திரு. ராம் பிரசாத் (மதுரவாயல்), திரு. கார்த்திகேயன் (வேளச்சேரி), திரு. அப்ரோஸ் (பூந்தமல்லி) மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1909177316053254268
Instagram: https://www.instagram.com/p/DII-_gEp62D/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==