கரூர் துயரத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு மநீம தலைவர் சார்பில் ரூ.1 லட்சம் நிவாரணம்

8 அக்டோபர், 2025

கரூர் கூட்ட நெரிசலில் தங்களது இன்னுயிரை நீத்தவர்களின் குடும்பத்தாரை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் திரு. கமல் ஹாசன் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னதோடு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணமும் அளித்தார்.

கரூர் பயணத்தின் போது சந்திக்க இயலாமல் போன, மதுரை பகுதியை சார்ந்த குடும்பங்களுக்கு, தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின் படி கட்சியின் மதுரை மண்டலச் செயலாளர் திரு. அழகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கமல் பண்பாட்டு மையம் சார்பாக தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை நேற்று (08/10/2025) நேரில் வழங்கினர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான காசோலையை வழங்குகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மண்டல அமைப்பாளர் திரு. சிவ பாலகுரு, மாவட்ட அமைப்பாளர் திரு. M.பாண்டியன், மாவட்டப் பொறுப்பாளர் திரு. சிவ ஹாசன் உள்ளிட்டோருடன் திரு. முனியசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#KarurTragedy
#KarurStampede

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1976249036538532143

Facebook: https://www.facebook.com/share/p/17RAiyNEer/

Instagram: https://www.instagram.com/p/DPlj2DiCQlK/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post