மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சேப்பாக்கத்தில் பொதுமக்களுக்கு மோர், பழங்கள் விநியோகம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதலின்படி, சென்னை சேப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி 116-வது வார்டு பகுதியில், வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் பொதுமக்களுக்கு நீர், மோர் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாவட்டச் செயலாளர் திரு. J.அப்துல் முசாபர் தலைமை வகித்தார். நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. G.நாகராஜன், சென்னை மண்டலச் செயலாளர் திரு. T.மயில்வாகனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டச் செயலாளர்கள் திரு. R.சுப்பிரமணியம், திரு. T.கலியமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.
நிகழ்வில் கட்சியின் தொழிலாளர் அணி சென்னை மண்டல அமைப்பாளர் திரு. D.சேகர், மாவட்டச் செயலாளர் திரு. கோவிந்தராஜ், நகர செயலாளர்கள் திரு. தண்டபாணி, திரு. ராஜா, வட்ட செயலாளர்கள் திரு. கண்ணன், திரு. முகமது சபியுல்லா, திரு. நிஜேந்திரன், திரு. ரவி புஷ்பராஜ், கிளைச் செயலாளர்கள் திருமதி. உமா மகேஸ்வரி, திரு. ஜோசப், திரு. பாலு, திரு. ஜாபர், திரு. கமல், திரு. பப்லு, திரு. சுவாதிகுமார் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
மேலும் ஏராளமான பொதுமக்கள், மக்கள் நீதி மய்யம் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1914300539334271381
Facebook: https://www.facebook.com/share/p/1AtLBPY6W2/
Instagram: https://www.instagram.com/p/DItY4iPpXNM/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==