மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நம்மவர் அவர்களை சந்தித்த, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக்குழுவினர்.

14 மார்ச், 2024

இன்று மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்களை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக்குழுவினர் சந்தித்தனர்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வெளியிட்டதையொட்டி, போராட்டத்தில் வெற்றிபெற்ற குழுவினர், போராட்டத்தின்போது களத்திற்கு வந்து ஆதரவளித்தது மட்டுமல்லாமல் தொடர்ந்து தன் ஆதரவை நல்கிய நம்மவர் அவர்களை சந்தித்து ஆதரவு கொடுத்தமைக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.

கலந்து கொண்ட போராட்ட குழுவினர்: 
திருமதி. பாத்திமா பாபு, திரு. தங்கையா, திரு. பிரின்ஸ் கர்டோசா, 
திரு. தெர்மல் ராஜா, திரு. ரீகன், திரு. சகாயம், திரு. கிதர் பிஸ்மி, 
திரு. மின்னல் அம்ஜித், திரு. பாக்ஸர் மைக்கேல், திரு. செபாஸ்டியான்

தலைவர் நம்மவர் அவர்கள் ஏப்ரல் 1, 2018 அன்று தூத்துக்குடி சென்று ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் போராட்டக்குழுவினரோடு கலந்துகொண்டார்.

அத்துடன், மே 22, 2018 அன்று மக்கள்மீது நடந்த துப்பாக்கி சூட்டை தொடர்ந்து, மறுநாளே ( மே 23, 2018 ) நம்மவர் அவர்கள் தூத்துக்குடி சென்று, மருத்துவமனையில் காயமடைந்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த மக்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு, துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் இல்லங்களுக்குச் சென்று அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் அப்போதைய அரசுக்கு தன் கடும் கண்டனத்தை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

Download PDF

Download PDF



சமீபத்திய காணொளி







Share this post