தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் சிந்தனையை கொச்சைப்படுத்திய திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு கண்டனம்.

14 நவம்பர், 2024

தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் சிந்தனையை கொச்சைப்படுத்திய திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு கண்டனம்.
(14-11-2024)

பாரதிய ஜனதாவில் கேட்பாரற்று இருக்கும் திருமதி. தமிழிசை சௌந்தராஜன் அவர்கள், இன்று நம் தலைவர் நம்மவர். திரு. கமல் ஹாசன் அவர்கள் தனக்களிக்கப்பட்ட 
உலகநாயகன் என்ற பட்டத்தை தவிர்க்கும்படி வெளியிட்ட அறிக்கையை, அரைவேக்காட்டுத்தனமாக விமர்சித்துள்ளார். 

நம் தலைவர், ஆளும் திமுகவின் மிரட்டலால்தான் தன் பட்டத்தை துறந்துள்ளதாக கணிப்பு வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் நின்று எம்பி ஆகி மத்திய அமைச்சராகிவிடலாம் என்ற கனவில், இருந்த கவர்னர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் திருமதி. தமிழிசை சௌந்தராஜன். இவர் தன் வாழ்க்கையையே சரியாக கணிக்க முடியாதவர். 

நம் தலைவரின் செயல்பாட்டை கணிக்க முயன்றுள்ளார்.

நம் தலைவர் மிரட்டலுக்கு அஞ்சுபவர் அல்ல என்பதை தமிழிசை அவர்கள், அவரது தலைவரை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும்.

அத்துடன் நம் தலைவர் மிரட்டலுக்கு பணிபவரும் அல்ல, நம் மதிப்பிற்குரிய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு மிரட்டும் போக்குள்ள அரசுமல்ல என்பதை டாக்டர் புரிந்து கொள்ள வேண்டும்.

தலைவர் நம்மவர் உலகநாயகன் பட்டத்தை துறந்தது தன்னை ஈடுபடுத்திக்கொண்ட கலைத்துறையில்  முழுமை பெற்ற ஞானத்தின் வெளிப்பாடு.

அது சாதித்த மனிதனின் பக்குவத்தின் வெளிப்பாடு.

இதை புரிந்து கொள்ளும் பக்குவம் தங்களுக்கில்லை என்பது வருத்தத்திற்குரியது.

முரளி அப்பாஸ்
ஊடகம் & செய்தித் தொடர்பு
மாநிலச் செயலாளர்
மக்கள் நீதி மய்யம்.

Download PDF



சமீபத்திய காணொளி







Share this post