மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்களை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைச் செயலாளர் - நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் மாண்புமிகு K.N.நேரு அவர்களும், திமுக துணைப் பொதுச்செயலாளர் - பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஆ.ராசா அவர்களும், இன்று காலை தலைவர் அலுவலகத்தில் சந்தித்தனர்.
தலைவரின் மாமா அமரர் னிவாசன் அவர்களின் மறைவுக்கு ஆறுதல் கூறினர். அத்துடன், நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், தலைவர் நம்மவர் அவர்கள் தமிழ்நாடு முழுக்கப் பயணம் மேற்கொண்டு திமுக தலைமையிலான கூட்டணிக்குப் பரப்புரை செய்தமைக்கு நன்றியும் தெரிவித்துக்கொண்டனர்.
இவர்களோடு, திரு. K.N.நேருவின் சகோதரரும் உடனிருந்தார்.
- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.
தலைவர் நம்மவரை சந்தித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைச் செயலாளர் மற்றும் துணைப் பொதுச்செயலாளர்.
8 மே, 2024
in அறிக்கைகள்