மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள்,
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்
06/06/2025
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் திரு. கமல் ஹாசன் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர்களான திரு. A.G. மெளரியா, I.P.S., (ஓய்வு), திரு. R. தங்கவேலு மற்றும் பொதுச் செயலாளரான திரு. ஆ. அருணாச்சலம் M.A., B.L., ஆகியோர் உடன் சென்றிருந்தார்கள்.
- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்.
6 ஜூன், 2025
in அறிக்கைகள்