காஞ்சி மண்டலம் பொறியாளர் அணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி!

19 ஜனவரி, 2026

காஞ்சி மண்டலம் பொறியாளர் அணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி!

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 

விளையாட்டு மேம்பாட்டு அணி மாநிலச் செயலாளர் திரு. E.T.அரவிந்ராஜ் அவர்களின் தலைமையில், 

காஞ்சி மண்டலம் பொறியாளர் அணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15,16,17,18 ஆகிய நான்கு நாட்கள், செய்யாறு சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் கிரிக்கெட் போட்டி சிறப்பாக நடைபெற்றது.

மொத்தமாக 25 அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டியில், வெற்றி பெற்ற அணியினருக்கு காஞ்சி மண்டலச் செயலாளர் திரு. அருள் அவர்களும், சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் அவர்களும், பொறியாளர் அணி காஞ்சி மண்டல அமைப்பாளர் திரு. K.கோகுல் அவர்களும் கோப்பைகளை வழங்கி கௌரவித்தனர்.

நான்கு நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் செய்யாறு நகர நிர்வாகிகள் திரு. C.சதீஷ்குமார், திரு. K. கோகுல முகுந்தன் ஆகியோருடன் மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/i/status/2013173672840974628

Facebook: https://www.facebook.com/share/p/1J3v8iUxXZ/

instagram: https://www.instagram.com/p/DTr5urTCTk7/?igsh=MTcwbTk4ZjA2YWEzcQ==

சமீபத்திய காணொளி







Share this post