பிரான்ஸ் கமல் ஹாசன் நற்பணி மன்றம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு உணவு அருந்தும் நிழற்குடை அமைத்துக் கொடுக்கப்பட்டது.

11 நவம்பர், 2024

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு, பிரான்ஸ் கமல் ஹாசன் நற்பணி மன்றம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஃபிரான்காயிஸ் அவர்களின் ஆலோசனையின் பேரில் புதுச்சேரி அருகேயுள்ள கொத்தபுரிநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு உணவு அருந்தும் நிழற்குடை அமைத்துக் கொடுக்கப்பட்டது. இதற்கான நன்கொடையை உறுப்பினர் குணசேகர் கிளாடின் அளித்தார்

புதுச்சேரி கல்வித் துறை முதன்மைக் கல்வி அதிகாரி மோகன் தலைமையில், குணசேகர் கிளாடின் உணவருந்தும் கூடத்தை திறந்துவைத்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் லட்சுமிகாந்தம் மற்றும் குணசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு, கேக் ஆகியவற்றை குணசேகர் வழங்கினார். விழாவில், வாஞ்சிநாதன் இளந்தொண்டர் மன்ற நிறுவனர் ராமன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#KH_HBDCelebration
#HBDKamalHaasan

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1855956972262293823

Facebook: https://www.facebook.com/share/p/19etAY9Hj9/

Instagram: https://www.instagram.com/p/DCO1hOOPgYv/?utm_source=ig_web_copy_link

சமீபத்திய காணொளி







Share this post