காவல்துறைக்கு மக்கள் நீதி மய்யத்தின் பாராட்டுகள்!
மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முடக்கு சாலை பகுதியில் இருந்து வரும் வாகனங்களுக்கு முறையான சிக்னல் வசதி இல்லாத காரணத்தால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். மக்கள் நீதி மய்யம் மதுரை மாநகர நிர்வாகிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட இந்தப் பிரச்னையானது, உடனடியாக மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறைக்கு கோரிக்கை மனுவாக அனுப்பப்பட்டது. நமது மனுவின் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு, முடக்கு சாலையிலிருந்து வரும் பொதுமக்களுக்கு உடனடியாக புதிய சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, வாகன விபத்துகள் தவிர்க்கப்பட்டு பொதுமக்கள் சாலையை எளிதாகக் கடக்கின்றனர்.
கள ஆய்வு செய்தல், மனுவளித்தல், தொலைபேசியில் அதிகாரிகளிடம் நினைவூட்டுதல் என்ற தொடர் முன்னெடுப்புகள் செய்த மதுரை மேற்கு மநீம மாவட்டச் செயலாளர் திரு. முத்துக்கிருஷ்ணன், சமூக ஊடக அணி மாவட்ட அமைப்பாளர் திரு.தினேஷ்பாபு, விராட்டிபத்து 67வது வட்டச் செயலாளர் திரு. கோபிநாத் மற்றும் இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் திரு. நாகமணி ஆகியோருக்கு வாழ்த்துகள்.
கோரிக்கை மனுவளித்த இரண்டே நாட்களில், சிக்னல் விளக்குகள் அமைத்துக்கொடுக்க உடனடி நடவடிக்கை எடுத்த, மதுரை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் திருமதி. S.வனிதா அவர்களுக்கும், மதுரை மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திரு. D.இளமாறன் அவர்களுக்கும், திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. A.தங்கமணி அவர்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பாகவும், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாகவும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
கடந்த 21.09.2024 அன்று நடைபெற்ற மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், மய்ய நிர்வாகிகள் அனைவரும் மக்கள் பிரச்னைகள் தீர்க்கக் களப்பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியதை நினைவில் கொண்டு தொடர்ந்து களப்பணியாற்றுவோம்.!!
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#களத்தில்_மய்யம்
@ikamalhaasan @tnpolice @CMOTamilnadu @mducollector @SouthZoneTNpol @Mdu_CityPolice @Maduraidistpol1
@mdu_corp
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1839288325812924620
Facebook: https://www.facebook.com/share/p/KpGuuAC35TQWeWaH/
Instagram: https://www.instagram.com/p/DAYZc3svPac/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==