தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும், ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசை கண்டித்து மாபெரும் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்.

19 ஜனவரி, 2026

தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும், ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசை கண்டித்து மாபெரும் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்.

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றம், எய்ம்ஸ், மெட்ரோ ரயில் திட்டங்கள் நிறுத்தி வைத்தல், மதவெறி அரசியல், மதுரை விமான நிலையத்தின் சர்வதேச அந்தஸ்து, சிறப்பு நிதி பாகுபாடு, GST இழப்பீடு, பேரிடர் நிவாரண நிதி மறுப்பு, தேசியக்கல்வி கொள்கை மற்றும் கல்வி நிதி நிறுத்தம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி,

கட்சியின் சார்பில் கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் திரு. S.M.ஸ்ரீதர் அவர்களின் தலைமையில்,
மதுரை மண்டலச் செயலாளர் திரு. M.அழகர் மற்றும் தொழில்முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு P.பன்னீர்செல்வம் ஆகியோரின் முன்னிலையில், 

ஒன்றிய பாசிச பா.ஜ.க-வைக் கண்டித்து, கள்ளிக்குடி சத்திரத்தில் மாபெரும் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

திருமங்கலம் ஒன்றிய செயலாளர் திரு N.முத்துவடிவேல் அவர்களின் வரவேற்புரையில் துவங்கிய இந்நிகழ்வில் மதுரை மண்டலச் செயலாளர் திரு. M.அழகர், மகளிர் அணி மாநிலச் செயலாளர் (மதுரை & நெல்லை மண்டலங்கள்) திருமதி. R.பத்மா ரவிச்சந்திரன், நம்மவர் தொழிற்சங்க பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. R.சொக்கர், மண்டல அமைப்பாளர் திரு. M.பரணிராஜன், மாவட்டச் செயலாளர்கள் திரு. A.சிவக்குமார், திரு. K.கதிரேசன், மாவட்டத் துணைச் செயலாளர் திரு. V.M.சரவணன் மற்றும் இளைஞரணி நகர அமைப்பாளர் திரு. விஜயபாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இக்கூட்டத்தில் அணிகளின் மண்டல அமைப்பாளர்கள் திருமதி. P.கலையரசி, திரு. P.ராஜா, மாவட்டச் செயலாளர் திரு. நம்மவர் A.செந்தில், மாவட்ட அமைப்பாளர்கள் திரு. மா.பாண்டியன், திருமதி. M.செல்வி, திருமதி. லீலாசாரதி, செல்வி. தனலட்சுமி, திரு. M.கமல், நகரச் செயலாளர்கள் திரு. N.அன்பழகன், திரு. யோகராஜா, ஒன்றியச் செயலாளர்கள் திரு. T.சிவகணேசன், திரு. V.கண்ணன் ஆகியோருடன் முன்னாள் மாவட்ட செயலாளர் திரு S.M.ராம்குமார் மற்றும் மண்டல, மாவட்ட, நகர, ஒன்றிய, வட்ட, கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/i/status/2013245301793149271

Facebook: https://www.facebook.com/share/p/17gQ8M31Ld/

Instagram: https://www.instagram.com/p/DTsbZ30CZN-/?igsh=MTl6dTRuYjQ1emh4cA==

சமீபத்திய காணொளி







Share this post