மக்கள் நீதி மய்யம் கட்சியின் சேலம் மண்டல ஆலோசனை கூட்டம்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களது அறிவுறுத்தலின்படி, சேலம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலம் நேஷனல் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.
கட்சியின் சேலம் மண்டலச் செயலாளர் திரு. K.காமராஜ் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் திரு. D.தாசப்பராஜ், திரு. S.ஆதாம்பரூக், திரு. J.ஜெயபிரகாஷ், திரு. P.ஜெயபால், திரு. R.வடிவேல், முன்னாள் மாவட்டச் செயலாளர் திரு. J.சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில், சேலம் மேற்கு மநீம மாவட்டச் செயலாளர் திரு. C.A.மணிவண்ணன் வரவேற்றார்.
இக்கூட்டத்தில் துணைத் தலைவர்கள் திரு. A.G.மௌரியா அவர்கள், திரு. R.தங்கவேலு அவர்கள், விவசாய அணி மாநிலச் செயலாளர் திரு. G.மயில்சாமி, சமூக ஊடக அணி மாநிலச் செயலாளர் திரு. லஷ்மன், ஆதிதிராவிடர் நல அணி மாநிலச் செயலாளர் திரு. சிட்கோ A.சிவா, கோவை மண்டலச் செயலாளர் திரு. ஏ.ரங்கநாதன், பயிற்சி பட்டறை அணி கோவை மண்டல அமைப்பாளர் திரு. ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சேலம் வடக்கு மாநகரச் செயலாளர் திரு. V.S.சரவணன் நன்றி கூறினார்.
இந்தக் கூட்டத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள், பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம், கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்த்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் புதிய நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Links
Twitter: https://x.com/maiamofficial/status/1908809996957360430
Facebook: https://www.facebook.com/share/p/1AGjw1a5b6/
Instagram: https://www.instagram.com/p/DIGYEKXJw-L/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==
in நிகழ்வுகள்