தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அலுவலகம் வருகை.

20 ஏப்ரல், 2023

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. K.S.அழகிரி அவர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைமை அலுவலகம் வருகைத்தந்து தனது புதல்வியின் திருமண அழைப்பிதழை நமது பொதுச்செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்களிடம் அளித்தார்.

காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. அழகிரி அவர்களுடன்,  காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் மற்றும் ஊடகத் துறை தலைவர் திரு. கோபண்ணா அவர்களும், காங்கிரஸ் துணைத் தலைவர் திரு. பொன்.கிருஷ்ணமூர்த்தி அவர்களும் வருகை தந்தனர் 

அழைப்பிதழை பொதுச்செயலாளர் பெற்றுக்கொள்ளும்போது கட்சியின் மாநில செயலாளர்கள் திரு. செந்தில் ஆறுமுகம், திரு. சிவ இளங்கோ, திரு. முரளி அப்பாஸ் உடனிருந்தனர். வருகை தந்த திரு. K.S.அழகிரி அவர்களுடன், தலைவர் நம்மவர் அவர்கள் வெளிநாட்டிலிருந்து அலைபேசியில் உரையாடினார்.

Social Media links

Twitter: https://twitter.com/maiamofficial/status/1649005901385441280?t=eb0sluk4iIJvcFlK_GgU6Q&s=19

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0H25WvfLhasitma1W4Q5mbxqPgwjtLDVU9wYpeUbPbZFJMaysoyBkZiY98zLUj5nxl&id=100064900236042&mibextid=Nif5oz

Instagram: https://www.instagram.com/p/CrQXV5RvDRO/?igshid=YmMyMTA2M2Y=


சமீபத்திய காணொளி







Share this post