மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களை,
கட்சியின் விளையாட்டு மேம்பாட்டு அணி மாநிலச் செயலாளர் திரு. E.T.அரவிந்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில்,
மாநில அளவிலான குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்கவிருக்கும் A. யோசிதா (7ஆம் வகுப்பு), D. கங்கைகொண்டன் (9ஆம் வகுப்பு), D. யோகிவர்மன் (12ஆம் வகுப்பு) மற்றும் குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளர் திரு. S.லிங்கேஷ்வரன் ஆகியோர், குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றனர்.
மேலும் மாணவி A. யோசிதா அவர்களுக்கு, மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்கு தேவையான உதவிகளை, கமல் பண்பாட்டு மையத்தின் மூலம் தலைவர் அவர்கள் வழங்கினார்.
தொடர்ந்து வியட்நாம் நாட்டின், ஹோ சி மின் சிட்டியில் ஜூலை 18, 2025 அன்று நடைபெற்ற, 9 நாடுகள் பங்கேற்ற ஆசிய அளவிலான "பவர் லிஃப்டிங் - ஏசியன் சாம்பியன்ஷிப் 2025" போட்டிகளில் தங்கப் பதக்கங்கள் வென்று, ரஷ்யா நாட்டின் மாஸ்கோவில் நடைபெறவிருக்கும் உலக அளவிலான போட்டியில் பங்கேற்கவிருக்கும் திரு. ம.கார்த்திக், திருமதி. லத்திபா சிராஜுதீன் ஆகியோர் தலைவரைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றனர்.
இந்நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம் அவர்கள் உடனிருந்தார்.
-ஊடகப்பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.
