தலைவர் பிறந்தநாள்!
நலப்பணிகள் செய்து மக்களோடு கொண்டாடுவோம்!
சுற்றறிக்கை
அன்புடையீர்,
மனித நேய மாண்பு, சமூக அக்கறை, அறிவுச் செழுமை, அரசியல் ஞானம், கலைத் திறமையால் தமிழ்ச் சமூகத்துக்கே பெருமை சேர்க்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் பிறந்த நாளை 07-11-2025 முதல் ஒரு மாதத்திற்கு தமிழ்நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாட பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் நமது கட்சி அலுவலகத்தில் கட்சிக் கொடியேற்றி மருத்துவ முகாம்கள், மரம் நடுதல், இரத்த தானம் - உடல் உறுப்பு தான முகாம்கள், கல்வி உபகரணங்கள், கல்வி உதவித்தொகை வழங்குதல், விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல், மாற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்துதல், வறியோருக்கு உதவுதல் போன்ற மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டும்; பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் நடத்தியும்; கொள்கை விளக்கச் சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள் மூலமும் தலைவர் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தன்னைச் சந்திப்பதற்குச் சென்னை வருவதைத் தவிர்த்து அவரவர் தொகுதியில் மக்களோடு மக்களாக நின்று நலப்பணிகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்துமாறு தலைவர் அவர்கள் அனைத்து நிர்வாகிகளுக்கும் அன்புக்கட்டளையிட்டுள்ளார். களப்பணிகளின் வாயிலாகத் தலைவரின் அன்பை மக்களிடம் கொண்டுசேர்ப்போம்.
நன்றி! நாளை நமதே!
ஆ. அருணாச்சலம் M.A., B.L.,
பொதுச்செயலாளர் - மக்கள் நீதி மய்யம்.
