மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல் ஹாசன் அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி
கற்றுக்கொள்ளவும், பெற்றுக்கொள்ளவும், கொண்டாடவும், கொடுத்து மகிழவும் எண்ணற்ற ஆச்சர்யங்களைத் தன்னுள் ஒளித்துவைத்தபடி உதிக்கிறது புதியதோர் ஆண்டு.
மூத்தோன் எனும் வகையில் Reduce - Regain - Rejoice எனும் மூன்று அம்சத் திட்டத்தை முன்மொழிகிறேன். ஸ்கீரின் டைம் துவங்கி துரித உணவு வரை குறைக்க வேண்டியதைக் குறைப்போம். ஆரோக்கியம் முதல் சீரான தூக்கம் வரை இழந்தவற்றை மீட்போம். வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் மகிழ்ந்து களிகூர்ந்து நிறைவாக வாழ்வோம்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
