மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை நிலையத்தில் குடியரசுதின விழா கொண்டாட்டம்.

26 ஜனவரி, 2026

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை நிலையத்தில் குடியரசுதின விழா கொண்டாட்டம்

26/01/2026

இந்திய திருநாட்டின் 77-வது குடியரசு தினத்தை கொண்டாடும் விதமாக,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலுடன்,

இன்று காலை 9.30 மணியளவில், கட்சித் தலைமை நிலையத்தில், கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G. மௌரியா IPS (Rted) அவர்கள் தேசியக்கொடியை ஏற்றினார்.

இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர்கள் திரு. செந்தில் ஆறுமுகம், திரு. முரளி அப்பாஸ், திரு. ராகேஷ் ராஜசேகரன், திரு. லக்ஷ்மன், திரு. அரவிந்ராஜ், சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில் வாகனன் ஆகியோருடன் மண்டல, மாவட்ட, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள், கட்சியின் உறுப்பினர்கள், தொண்டர்கள் முதலானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தொடர்ந்து நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

Download PDF


சமீபத்திய காணொளி







Share this post