தமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகளை ஊக்குவிக்க கமல் பண்பாட்டு மையம் நடத்தும் ‘மொழிபெயர்ப்புப் பயிற்சி முகாம்.

16 ஆகஸ்ட், 2024

தமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கமல் பண்பாட்டு மையம் ‘மொழிபெயர்ப்புப் பயிற்சி முகாம்’ நடத்துகிறது. 

ஓரான் பாமுக், ஹருகி முரகாமி உள்ளிட்ட பல சர்வதேச எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்த எழுத்தாளர் திரு. ஜி.குப்புசாமி பயிற்றுவிக்கிறார். 

இந்தப் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள், தங்களது சுயவிவரங்களுடன் kamalpanpattumaiyambooks@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். அத்துடன், சொந்தமாக மொழிபெயர்த்த ஒரு கட்டுரையை அல்லது ஒரு சிறுகதையை அந்த மொழிபெயர்ப்பின் மூல வடிவத்தோடு இணைத்து அனுப்ப வேண்டும்.

பயிற்றுநரால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சென்னையில் பயிற்சி அளிக்கப்படும்.

@kamalpanpattu

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1824311353160372520

Facebook: https://www.facebook.com/share/p/h1yBuabwVP28b1fQ/

சமீபத்திய காணொளி







Share this post