அண்ணல் பாதையை அனைவருக்குமான பாதையாக ஆக்கிக்கொள்வோம்.

14 ஏப்ரல், 2024

பரந்துபட்ட இந்திய சமுதாயம் விடுதலை பெற்ற கையோடு மதத்தாலும் சாதிச் சழக்காலும் மூச்சுமுட்டிக் கிடந்தபோது தெளிவிக்க வந்த தென்றல்; மனிதருள் சமத்துவம் பேணும் பேச்சைத் தொடங்கிய அண்ணல்; அதை அரசியல் சாசனம் என்று ஆதாரமாகச் செய்தும் வைத்த பெருமகன் பாபா சாகேப் அம்பேத்கர். 

மறுபடி சாதிப் பேச்சுகள் தொடங்கியிருக்கும் இந்நேரத்தில் அவரது தேவை முன்னெப்போதையும்விட கூடுதலாக உள்ளது. 

அவர்தம் பிறந்த நாளான இன்று அவருடைய சிந்தனையை மறுபடி கையிலெடுப்போம். அண்ணல் பாதையை அனைவருக்குமான பாதையாக ஆக்கிக்கொள்வோம்.

#Ambedkar

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1779378933030367680

Facebook: https://www.facebook.com/share/p/NkpArFmf9rvQq2cM/?mibextid=oFDknk

சமீபத்திய காணொளி







Share this post