சங்கரை இழந்து வாடும் உறவுகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் - தலைவர் திரு. கமல் ஹாசன்.

24 ஆகஸ்ட், 2023

திருவனந்தபுரத்தில் சந்திரயான் தொடர்பான செய்தி சேகரித்துவிட்டு திரும்புகையில் ஏற்பட்ட சாலை விபத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் சங்கர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. சங்கரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

விபத்தில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் புதிய தலைமுறை செய்தியாளர் நாகராஜன், ஒளிப்பதிவாளர் நாராயணமூர்த்தி, நியூஸ்-7 தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வள்ளிநாயகம் ஆகியோர் விரைவில் குணமடைய விழைகிறேன். 

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1694744683367547126?s=20

சமீபத்திய காணொளி







Share this post