"தமிழ்நாடு எப்போதும் விவாதங்களுக்குப் பாதுகாப்பான இடமாக இருந்து.வருகிறது". ம நீ ம தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் பெருமிதம்.

8 செப்டம்பர், 2023

ஒரு உண்மையான ஜனநாயகத்தின் தனிப்பெரும் அடையாளம், அதன் பிரஜைகள், தங்களது முரண் கருத்துக்களை முன்வைத்தல் மற்றும் விவாதத்தில் ஈடுபடுதல் . 

சரியான கேள்விகளைக் கேட்பது , பல தருணங்களில் முக்கியமான பதில்களை நமக்குத் தந்திருப்பதோடு , சமூகம் முன்னேறவும் காரணமாக இருந்திருக்கிறது என்பதை வரலாறு சொல்லிக் கொண்டே இருக்கிறது. 

உதயநிதி ஸ்டாலினுக்கு சனாதனத்தைப் பற்றியத் தன் கருத்தைக் கூற உரிமை உள்ளது. அதில் உங்களுக்கு மாற்றுக்கருத்து இருந்தால் , சனாதனத்தின் அருமைகளைத் தொகுத்துக் கொண்டு விவாதத்திற்கு வாருங்கள்.

மாறாக, மிரட்டல் உத்திகள், அல்லது சட்டரீதியான மிரட்டல்கள் அல்லது குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக உணர்ச்சிப்பூர்வமான பதில்களைத் தூண்டுவதற்காக அவரது வார்த்தைகளைத் திரித்தல். ஆகியவை ஏற்றுக் கொள்ளத் தக்கவை அல்ல.
 
ஆரோக்கியமான விவாதங்களுக்கு தமிழ்நாடு எப்போதும் விவாதங்களுக்குப் பாதுகாப்பான இடமாக இருந்து வருகிறது, அது தொடர்ந்தும் அப்படித்தான் இருக்கும். உள்ளடக்கம், சமத்துவம் மற்றும் முன்னேற்றத்தை உறுதிசெய்து, நமது மரபுகளை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்வது மிகவும் முக்கியமானது. இணக்கமான மற்றும் உள்ளடக்கிய சமூகத்தை வளர்ப்பதற்கு ஆக்கபூர்வமான விவாதங்களை ஏற்றுக்கொள்வோம்.

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1699803514418155592?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid028wyQJLsSPdHCi19HDN1mhcMoDfnhU6XHSNAg8Pdp61BusrEs5iWVntBwAffZG166l&id=100044460698474&mibextid=Nif5oz

சமீபத்திய காணொளி







Share this post