பிறப்பினால் உயர்வு தாழ்வு என்பதைப் பொறுத்துக்கொள்ளாத புரட்சியாளரின் நினைவு நாள் இன்று. - தலைவர் திரு. கமல் ஹாசன்.

6 டிசம்பர், 2023

பிறப்பினால் உயர்வு தாழ்வு என்பதைப் பொறுத்துக்கொள்ளாத புரட்சியாளர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு நாள் இன்று. 

பொருளாதார மேதை, சட்ட வல்லுநர், சமூகவியல் அறிஞர் என்று பல்வேறு முகங்கள் கொண்ட அம்பேத்கர், ‘கல்வியே விடுதலை’ என்பதைக் காட்டித் தந்தவர். கடினமான சூழல்களிலிருந்து மேலெழுந்து சாதிக்க முடியுமென்பதன் அடையாளமாக தேசமெங்கும் சிலைகள் வடிவிலும், நம் மனங்களிலும் நிமிர்ந்து நிற்கிறார் அண்ணல் அம்பேத்கர். 

சமத்துவப் பாதையில் பயணிப்பவர்களின் கைவிளக்காக ஒளிரும் பெருந்தகையாளரை மனதில் இருத்துவோம்..

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1732238707242197152?s=20

Facebook: https://www.facebook.com/iKamalHaasan/posts/pfbid02zm4uo2cAb3DovDbn9ziiic4tPSbXipAG72zLaQ3r3XAGRxtLAymNiyAhHP8Tungkl


சமீபத்திய காணொளி







Share this post