எழுத்தாளர் இராசேந்திர சோழன் காலமாகிவிட்டார். அவருக்கு என் அஞ்சலி. - தலைவர் திரு. கமல் ஹாசன்.

1 மார்ச், 2024

எண்பதாம் அகவையைத் தொடும் எழுத்தாளர் இராசேந்திர சோழன் காலமாகிவிட்டார். அஸ்வகோஷ் என்கிற புனைபெயரிலும் அவர் எழுதினார். 

சிறுகதைகளைப் புதுப் பாணியில் எழுதி சாதனை படைத்த இராசேந்திர சோழன், டில்லி தேசிய நாடகப் பள்ளியின் பயிற்சியைப் பெற்றுக்கொண்டு, நாடகப் பிரதிகளை உருவாக்கியவர். 

பொதுவுடைமைத் தத்துவங்களை எழுதிப் பரவலாக அறியப்பெற்ற முற்போக்காளர். தீவிரமான மொழிப்பற்றாளரான இராசேந்திர சோழன், தெனாலி ராமன், மரியாதை ராமன் வரிசைக் கதைகளில் கூட, தன் பிரத்யேகப் பார்வையைப் பொருத்தி மறு உருவாக்கம் செய்தவர். அவருக்கு என் அஞ்சலி.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1763467540423135638?s=20

சமீபத்திய காணொளி







Share this post