சேலம் மண்டலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிகளில் பொதுமக்களுக்கு உதவிய நிர்வாகிகள்.

22 November 2024

சேலம் மண்டலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிகளில் பொதுமக்களுக்கு உதவிய மநீம கட்சியினர்.

சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட குமாரபாளையம் மநீம மாவட்டம் சிஎஸ்ஐ பள்ளி, ஜே.கே.கே ரங்கம்மாள் பள்ளி, சங்ககிரி மநீம மாவட்டம் எர்ணாபுரம் ஊராட்சி பள்ளி, காக்காபாளையம் அரசுப்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள்களில்,

மகளிரணி குமாரபாளையம் மநீம மாவட்ட அமைப்பாளர் திருமதி. சித்ராபாபு, மகளிரணி ஒன்றிய அமைப்பாளர் திருமதி. மல்லிகா, நிர்வாகிகள் திரு. விமல்ராஜ், திரு. C.S.கணேசன் ஆகியோர் பங்கேற்று, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தப் பணிகளில் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கினர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1859827960171368624

Facebook: https://www.facebook.com/share/p/19FL7FWkCZ/

Instagram: https://www.instagram.com/p/DCqVuBvJPXn/?utm_source=ig_web_copy_link

Recent video







Share this post