சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி மநீம மாவட்டம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பொதுமக்களுக்கு நீர் மோர், பழச்சாறு, தர்பூசணி விநியோகம்.

12 May 2025

மக்கள் நீதி மய்யம் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி மநீம மாவட்டம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பொதுமக்களுக்கு நீர் மோர், பழச்சாறு, தர்பூசணி விநியோகம்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி மநீம மாவட்டத்தின் சார்பாக, உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க பொது மக்களுக்கு நீர்மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய், பழங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G. மௌரியா அவர்களின் தலைமையில், மாவட்டச் செயலாளர் திரு. J. அப்துல் முசாஃபர் ஒருங்கிணைப்பில், ராயப்பேட்டை மீர்சாஹிப்பேட்டை மார்க்கெட் அருகில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கட்சியின் நிர்வாகிகள் திரு.சார்லஸ், திரு.தனசேகர், திரு.சையது சுபேர், திரு. J. ஃபயாஸ், திரு. ஐஸ் ஹவுஸ் கண்ணன், திரு. லேப் வெங்கடேஷ், திரு.M.P. புருஷோத்தமன், திரு. ஜாஃபர் ஆகியோர் செய்திருந்தனர்.


நிகழ்வில் நகரச் செயலாளர் திரு. P. S. தண்டபாணி, வட்ட செயலாளர்கள் திரு.முஹம்மது சபியுல்லா, திரு.கலியமூர்த்தி, திரு.நிஜேந்திரன், தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் திரு. D. சேகர், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் திருமதி. ரூபா தேவி, சமூக ஊடக அணி மாவட்ட அமைப்பாளர் திரு. G. ராஜ்குமார், நற்பணி அணி அமைப்பாளர் திரு.சுவாதி குமார், நிர்வாகிகள் திரு. ஜோசப், திரு. சுப்பிரமணியம், திரு.பாலசுப்பிரமணியம்,திரு. பப்லு, திரு.மருதநாயகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1921823329822126384

Facebook: https://www.facebook.com/share/p/1ATMd4Jy5y/

Intagram: https://www.instagram.com/p/DJi17t7Jifb/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post