துணைத் தலைவர் திரு.தங்கவேலு அவர்களின் தலைமையில், கோவை மண்டல மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்.

14 August 2024

மநீம கட்சி வளர்ச்சிப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள,
கோவை மண்டல மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு. 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை மண்டல மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் திரு. R.தங்கவேலு அவர்கள் தலைமையில் கோவையில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர்கள் திரு. G.மயில்சாமி, திருமதி. மூகாம்பிகா ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை கோவை மண்டலச் செயலாளர் திரு. A.ரங்கநாதன் செய்திருந்தார்.

தமிழகத்தில் அடுத்து நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னெடுப்புகளை சிறப்பான முறையில் மேற்கொள்வது, ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று மாநிலம் முழுவதும் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்பது, கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்தி, அதிக அளவிலான உறுப்பினர்களை சேர்ப்பது, புதிய நிர்வாகிகள் நியமனம், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கட்சியின் கொடிக்கம்பங்களை நடுவது மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிகளைத் தீவிரமாக மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டு, அதுகுறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் திரு. D.பிரபு (கோவை தெற்கு), திரு. S.தனவேந்திரன் (கோவை வடக்கு), திரு. K.மயில் கணேஷ் (சிங்காநல்லூர்), திரு. M.வரதராஜ் (சூலூர்), திரு. R.சசிகுமார் (மொடக்குறிச்சி), திரு. P.V.முருகன் (பெருந்துறை), திரு. V.நயினார் (பவானி), திரு. H.ஜாகீர் உசேன் (உதகை) மற்றும் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அமைப்பின் கோவை மண்டல அமைப்பாளர் திரு. K.P.செவ்வேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1823338317485682769?t=LjApOWt_TmUobhf3mkHwKw&s=19

Facebook: https://www.facebook.com/share/p/ahbAyLJL4zLGCRdN/?mibextid=xfxF2i

Instagram: https://www.instagram.com/p/C-nEdSyvyep/?igsh=dTNsYncxMW1tbGly

Recent video







Share this post