காகிதத்தில் பிணங்களாக்கப்பட்டவர்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட வேண்டும் என்று நான் கோருகிறேன்.

6 February 2026

ஏற்கனவே, பீகார் மாநிலம் "உயிருடன் இருக்கும் பிணங்கள்" நிறைந்த தேசமாகிவிட்டது. இந்த நோய் நாடு முழுவதும் பரவுவதை நாங்கள் விரும்பவில்லை. வங்காளத்தைச் சேர்ந்த எனது 'தீதி' (மம்தா பானர்ஜி) கூட இதையே தேர்தல் ஆணைய அலுவலகத்தில் முறையிட்டார். இதை பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கையில், தீதி உச்ச நீதி மன்றத்தில் வழக்காடிக்கொண்டிருக்கிறார். தேர்தல் ஆணையம் நிச்சயமாக இந்தப் பரவலுக்குத் துணை போகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் காகித அளவில் சுமார் 1 கோடி பேர் "உயிருடன் இருக்கும் பிணங்களாக" மாற்றப்படக்கூடும் என்று நாங்கள் அஞ்சுகிறோம். இந்த விபரீதத்தைத் தடுக்க நான் கடவுளிடம் வேண்ட முடியாது. எனது பகுத்தறிவு அந்தச் சிந்தனையை எப்போதோ நிராகரித்துவிட்டது.

அரசாங்கத்தில் இருப்பவர்களிடமும் நான் கெஞ்சப் போவதில்லை. காகிதத்தில் பிணங்களாக்கப்பட்டவர்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட வேண்டும் என்று நான் கோருகிறேன். அது அற்புதங்களால் நடக்காது. அற்புதத்திற்காகக் காத்திருக்க எங்களுக்கு நேரமில்லை. எங்கள் வாழ்நாள் குறுகியது. இப்போதே செயல்படுங்கள். 

- மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி அவர்கள்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#RajyaSabha

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2019761746278490590?s=20

Facebook: https://www.facebook.com/share/v/1GFYL7HvME/

Instagram: https://www.instagram.com/reel/DUavLfxiT4V/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post