ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பாக இறுதி அஞ்சலி!

15 December 2024

நேற்று காலமான, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர், முன்னாள் மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. EVKS இளங்கோவன் அவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி மற்றும் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் சார்பாக இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு மாநிலச் செயலாளர் திரு. முரளி அப்பாஸ், பொறியாளர் அணி மாநிலச் செயலாளர் டாக்டர். வைத்தீஸ்வரன், மாணவர் அணி மாநிலச் செயலாளர் திரு. ராகேஷ் ராஜசேகரன், சமூகஊடகம் மாநிலச் செயலாளர் திரு. லஷ்மன், கொள்கை உருவாக்கம் மாநிலச் செயலாளர் திரு. அர்ஜுனர், செயற்குழு உறுப்பினர் திருமதி. சினேகா மோகன்தாஸ் ஆகியோர் திரு. இளங்கோவன் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1868239770528178286

Facebook: https://www.facebook.com/share/p/18LtXBGLPL/

Instagram: https://www.instagram.com/p/DDmG5wyJ4sv/?utm_source=ig_web_copy_link

Recent video







Share this post