நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் கொடியேற்று விழா: மநீம துணைத் தலைவர் திரு.A.G.மௌரியா அவர்கள் ஏற்றிவைத்தார்.

20 October 2024

நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் 5-ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் பேரவைக் கொடியை மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G.மௌரியா I.P.S. (Retd) அவர்கள் ஏற்றிவைத்தார். பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. R.சொக்கர் அவர்கள் தலைமை வகித்தார். 

விழாவில், பேரவை பொதுச் செயலாளர் திரு. V.ரவிச்சந்திரன் அவர்கள் வரவேற்றார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் திரு ஆ.அருணாச்சலம் M.A., B.L., முன்னிலை வகித்தார்.

தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள், இணைப்பு சங்க நிர்வாகிகள், நற்பணி அணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. G.நாகராஜன், மாநிலச் செயலாளர்கள் திரு. செந்தில் ஆறுமுகம், திரு. முரளி அப்பாஸ், திரு. S.வைத்தீஸ்வரன், திருமதி. சினேகா மோகன்தாஸ், தொழிமுனைவோர் அணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. மயில்வாகனன் தணிகைவேல் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் திரளாகப் பங்கேற்றனர்.

Kamal Haasan
#KamalHaasan 
#MakkalNeedhiMaiam 
#NTSP 
#நம்மவர்_தொழிற்சங்கப்பேரவை

Social Media Link

 Twitter: https://x.com/maiamofficial/status/1847977708535607774

Facebook: https://www.facebook.com/share/p/Rtj5oCsu6ybi5Mza/

Instagram: https://www.instagram.com/p/DBWIvd9vGs_/?utm_source=ig_web_copy_link

Recent video







Share this post