மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் திரு.கமல் ஹாசன் அவர்களுக்கு இன்று பிறந்த நாள்.

7 November 2024

நடுநிலைக் கோட்பாடுகளுடன் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்பவரும், மாபெரும் அரசியல் இயக்கத்தின் தன்னிகரற்ற தலைவருமான மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் திரு.கமல் ஹாசன் அவர்களுக்கு இன்று 70-வது பிறந்த நாள். தமிழ்ச் சமூகத்துக்கே பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் நம்மவரால் தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது.

இந்த நன்னாளில், நம்மவர் பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவையினர் மற்றும் அவர் மீது பேரன்பு வைத்திருக்கும் பொதுமக்கள் அனைவர் சார்பிலும் திரு.கமல் ஹாசன் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அனைத்து நலமும், வளமும் பெற்று, தமிழ்ச் சமூகத்துக்கு இன்னும் பல்லாண்டுகள் அவர் சேவையாற்றி, திரைத் துறையிலும், அரசியல் அரங்கிலும் பல சாதனைகள் புரிய வேண்டுமென மனதார வாழ்த்துகிறோம்


#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#KH_HBDCelebration
#HBDKamalHaasan

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1854446513113694672

Facebook: https://www.facebook.com/share/p/15ixtYgQPf/

Instagram: https://www.instagram.com/p/DCEF_tFJEms/?utm_source=ig_web_copy_link

Recent video







Share this post