மக்கள் நீதி மய்யம் விளையாட்டு மேம்பாட்டு அணி, கமல் பண்பாட்டு மையம் சார்பில் கபடி அணியினருக்கு ஆதரவு வழங்கிய தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள்.

29 August 2025

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.  கமல் ஹாசன் அவர்கள்,

மாணாக்கர்களும், இளைஞர்களும் விளையாட்டின் மீது அதிக ஈர்ப்பு பெற வேண்டும் என்பதற்காகவும், விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தி, வாழ்க்கையில் அது தரும் ஒழுக்கம், ஆரோக்கியம் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை வலியுறுத்தவும்,

நம் கட்சியில் “விளையாட்டு மேம்பாட்டு அணி”யை தொடங்கி, திரு. E.T. அரவிந்ராஜ் அவர்களை, அந்த அணியின் மாநிலச் செயலாளராக நியமித்தார்.

மக்கள் நீதி மய்யத்தின் விளையாட்டு மேம்பாட்டு அணி தொடங்கப்பட்டது முதலே, சென்னையின் பல்வேறு இடங்களில் அணியின் சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக கபடிப் போட்டிகளில் தொடர் சாதனை படைத்து வரும், சென்னை கண்ணகி நகரைச் சார்ந்த கபடி வீராங்கனைகள் 11 பேருக்கு, மக்கள் நீதி மய்யம் மற்றும் காவேரி மருத்துவமனை சார்பில் ஊட்டச்சத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் கமல் பண்பாட்டு மையத்தின் மூலம், கபடி ரப்பர் மேட் ஆடுகளம் (Kabaddi Mat) வழங்கி, அந்த வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொணரும் சூழலை ஏற்படுத்தினார் நம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள்.

இந்த நிகழ்வினை மக்கள் நீதி மய்யம் கட்சியின் விளையாட்டு மேம்பாட்டு அணி மாநிலச் செயலாளர் திரு. E.T.அரவிந்ராஜ், சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன், ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு மாநிலச் செயலாளர் திரு. முரளி அப்பாஸ், மாணவர் அணி மாநிலச் செயலாளர் திரு. ராகேஷ் ராஜசேகரன் மற்றும் கண்ணகி நகரைச் சார்ந்த கபடி பயிற்சியாளர் திரு. ராஜி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#NationalSportsDay

Social Media LIink

Twitter: https://x.com/maiamofficial/status/1961449275080217056

Facebook: https://www.facebook.com/reel/777462134779005/

Instagram: https://www.instagram.com/reel/DN8Zl98Cr65/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post