மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

7 April 2025

மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதல்படி, கட்சியின் மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மகளிரணி மாநிலச் செயலாளர் திருமதி. பத்மாவதி ரவிசந்திரன் (மதுரை, நெல்லை மண்டலங்கள்), மண்டல அமைப்பாளர் திருமதி. கலையரசி ஆகியோரின் தலைமையில் மதுரையில் நடைபெற்றது. 

2026 சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள், பூத் கமிட்டி அமைத்தல், புதிய உறுப்பினர் சேர்ப்பு, மகளிரணியை வலுப்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

சிறப்பு அழைப்பாளராக குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. ஹேமமாலா மற்றும் உதவி ஆய்வாளர் திருமதி. விஜயலக்ஷ்மி ஆகியோர் பங்கேற்று, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான `காவலன் ஆப்' குறித்து விளக்கினர். 

இந்தக் கூட்டத்தில் மதுரை மாவட்ட அமைப்பாளர்கள் திருமதி. மணிமேகலை, திருமதி. மணிமாலா பாபு, திருமதி.லீலாவதி, திருமதி. செல்வி, சிவகங்கை மாவட்ட அமைப்பாளர் திருமதி. உமையாள், திருப்பரங்குன்றம் மாவட்ட அமைப்பாளர் திருமதி. லீலாவதி, சிவகங்கை நகர அமைப்பாளர் திருமதி. மும்தாஜ், வார்டு அமைப்பாளர் திருமதி. போதும் பொண்ணு, திருப்பரங்குன்றம் 60-வது வார்டு வேட்பாளர் திருமதி. ரதி, உறுப்பினகள் திருமதி. ராஜலட்சுமி, திருமதி. சுகுணா, செல்வி. ஜோதிமணி உள்ளிட்ட களப்பணியாளர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

 Twitter: https://x.com/maiamofficial/status/1909213362078220456

Facebook: https://www.facebook.com/share/p/19RJ22ANh7/

Instagram: https://www.instagram.com/p/DIJPlNvpWtN/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post